'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, தான் தயாரிக்கும் புதிய படமொன்றில் தனது மகளையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறார். நடிகர் கோவிந்தாவுக்கு நர்மதா என்ற மகளும், யஷ்வர்தன் என்ற மகனும் உள்ளனர். 22 வயதாகும் தன்னுடைய மகளை சொந்த தயாரிப்பில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளார் கோவிந்தா. நர்மதா அறிமுகமாக உள்ள படம் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று நடிகர் கோவிந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "படம் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். நான் ஆரம்பத்தில் படம் தயாரித்தேன். ஆனாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அப்போது என்னுடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எனக்கு ஆறுதல் அளித்தார்கள். என்னுடைய மகள் (நர்மதா) எனது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார். அவருக்காக நல்ல கதையம்சம் கொண்ட படத்தைத் தயாரிப்பேன். அதற்கான முயற்சியில் உள்ளோம். அவர் பாலிவுட்டில் அவருக்குரிய இடத்தை பிடிப்பார், என்று கூறியுள்ளார்.