ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்சிஏ படத்தை அடுத்து நானி நடித்து வரும் படம் கிருஷ்ணார்ஜூனா யுத்தம். இந்த படத்தின் படப்பிடிப்பு அனந்தபூரில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை அனந்தபூரில் இருந்து ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிற்கு அவர் காரில் ஜூப்லி ஹில்ஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் அவர் கார் மோதியது.
இந்த விபத்தில் நானி மற்றும் உடனிருந்த அவரது தந்தை, இரண்டு ஊழியர்கள், கார் டிரைவர் என அனைவருக்குமே காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், நானிக்கு கார் விபத்து என்றதும் டோலிவுட் பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் நானியின் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது டுவிட்டரில், நான் நன்றாக இருக்கிறேன். உடம்பில் ஆங்காங்கே சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று நானி தெரிவித்துள்ளார்.