ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நாயகியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அதையடுத்து சந்தானத்துக்கு ஜோடியாக ஓடி ஓடி உழைக்கனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கில் சந்தீப் கிஷனுடன் மனசுக்கு நச்சிண்டி, ராஜ்தருணுடன் ராஜூகடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அமைரா.
இந்த இரண்டு படங்களிலுமே அடுத்தடுத்து கமிட்டான அமைராவுக்கு தெலுங்கு மொழி சுத்தமாக தெரியாது என்பதால் டயலாக் பேசி நடிக்க ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். அப்போது மனசுக்கு நச்சிண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சந்தீப் கிஷன்தான் ஸ்பாட்டில் இருக்கும் போது அவருக்கு தெலுங்கு வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்தாராம். இதை தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள அமைரா, சந்தீப் கிஷன் அவ்வப்போது சொல்லிக்கொடுத்த தெலுங்கை வைத்து இப்போது நான் ஓரளவு தெலுங்கு பேசி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.