தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒவ்வொரு ஆஸ்கர் விருது வழங்கு விழாவில் ஒரே படம் பல விருதுகளை குவிப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வரிசையில் இந்த ஆண்டு தி ஷேப் ஆப் வாட்டர் என்ற படம் விருதுகளை குவிக்க காத்திருக்கிறது. வருகிற மார்ச் 4ந் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடக்க இருக்கிறது.
இதில் ஆஸ்கர் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (நாமினி) பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. இதில் கால் மீ பை யுவர் நேம், டார்க்கஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட்அட், லேடி பேர்ட், பாந்தம் திரெட், தி போஸ்ட், தி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசவுரி மற்றும் தி ஷேப் ஆப் வாட்டர் ஆகிய 9 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தி ஷேப் ஆப் வாட்டர் படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பாளர், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு உள்பட 13 பிரிவுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பிரிவின் கீழ் படம் விருதுகளை அள்ளுவது உறுதி என்ற கூறப்படுகிறது. இதில் டன்கிர்க் படம் 8 பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.