ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தன் டுவிட்டரில், எனக்கு மூத்தவர், என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது என்று கூறியுள்ளார்.
விஷால் தன் டுவிட்டரில், இசை கடவுள் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய 2-வது விருது அறிவிக்கப்பட்டுள்ளது, வாழ்த்துகள். அனைவரும் பெருமை கொள்ளும் தருணம் என்று தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.