Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டு மொழிகளில் உருவாகும் சமந்தாவின் யு டர்ன்

24 ஜன, 2018 - 16:19 IST
எழுத்தின் அளவு:
Samantha-confirms-on-U-Turn

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று அறிவிக்கும் நடிகைகள் மத்தியில் சமந்தா சமர்த்து. சுமார் 10 நாட்கள் மட்டும் புதுமண வாழ்க்கையை அனுபவித்துவிட்டு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கிறார் சமந்தா.

இந்த வருடம் அவரின் நடிப்பில் நான்கு படங்களாவது வெளிவர வாய்ப்பிருக்கிறது. விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள 'இரும்புத்திரை' படம் மார்ச் 28ல் வெளியாகிறது. தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநதி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்கள் இல்லாமல், 'யு டர்ன்' கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார் சமந்தா.

சமந்தா நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகும் என நீண்டநாட்களாக சொல்லப்பட்டுக் கொண்டிருந்த இந்தப் படம் பற்றிய அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற பேனர் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்குகிறது.

Advertisement
ஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு படம் சாத்தியமா?ஜீவா நடிப்பில் ஒரேநாளில் இரண்டு ... பெண்களை சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் : அனுஷ்கா பெண்களை சீண்டுபவர்களின் கையை வெட்ட ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in