ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
இயக்குனராக இருந்தாலும் தனது நடிப்பு பசிக்காக அவ்வப்போது சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து வரும் கவுதம் மேனன், மலையாளத்தில் முதன்முதலாக 'நாம்' என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, கொச்சியில் நடைபெற்ற அந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டு அதை உறுதி செய்தார்.
இந்தநிலையில் பஹத் பாசில் நடிக்கும் 'டிரான்ஸ்' என்கிற படத்திலும் மிக முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் கவுதம் மேனன். இதற்கு முன்பாக இந்த கேரக்டரில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் நடிப்பதாக இருந்ததாம். 'உஸ்தாத் ஹோட்டல்' புகழ் இயக்குனரான அன்வர் ரஷீத் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தை இயக்குகிறார்.