விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் நடிகர்களுக்கு இணையான வேடத்தில் நடிகைகள் நடித்தபோதும், நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஆனால், பாலிவுட்டில் சில நடிகைகள் அங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
இதுபற்றி அனுஷ்காவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், நடிகைகளைப் பொறுத்தவரை ஓரிரு படங்களில் அழுத்தமான வேடங்களில் நடிக்கிறோம். ஆனால் நடிகர்கள் படத்துக்குப்படம் மொத்த கதையையும் தங்கள் தோளில்தான் சுமக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் பெருவாரியான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பதில் தவறில்லை. அவர்கள் அதற்கு தகுதியானவர்களே.
அதேசமயம், என்னைப்பொறுத்தவரை நடிகர்களுக்கு இணையாக சம்பளம் தர வேண்டும் என்று கேட்பதை விட, அவர்களுக்கு இணையாக அழுத்தமான கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். அந்த வகையில், நடிகர்களுடன் போட்டிப்போட்டு நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் அனுஷ்கா.