'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி 2-வைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. ஐந்து ஆண்டுகளாக சரித்திர படத்தில் நடித்து வந்தவர், அந்த சாயல் தனது புதிய படத்தில் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பாடிலாங்குவேஜையே மாற்றி ஸ்டைலிசான கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ்.
இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தபோதும், தொடர்ந்து ஐதராபாத்திலேயே நடந்து வந்த நிலையில், தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு, பிப்ரவரி மாதம் முதல் 60 நாட்கள் தொடர்ந்து துபாயில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பிரபாஸ் - நீல்நிதின் முகேஷ் பங்குபெறும் அதிரடி சண்டை காட்சி துபாயிலுள்ள மிக உயரமான கட்டிடத்தில் தான் படமாக்கப்பட உள்ளது.