ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் காயத்ரி. அதன் பிறகு புரியாத புதிர் படத்தில் நடித்தார். நல்ல திறமையும், அழகும் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காதவர் என்ற கருத்து காயத்ரி மீது இருக்கிறது. இதனால் அடுத்தடுத்த படங்களில் விஜய் சேதுபதி அவருக்கு சிபாரிசு செய்கிறார் என்று கூறப்படுவதுண்டு.
தற்போது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதியும், காயத்ரியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதனை ஆறுமுக குமார் தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி காயத்ரி எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:
ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக்கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து, இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்டவர். அவரை இந்த படத்தில் பரிந்துரைத்ததற்கு பெருமைப்படுகிறேன். காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும் என்றார் விஜய் சேதுபதி.
படத்தின் இன்னொரு நாயகர் கவுதம் கார்த்திக் கூறியதாவது: இந்த படத்தில் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரொம்பவே எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். என்னுடைய நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படி தான். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி என்னை பரிந்துரைத்தது எனக்கு பெருமை. அவர் எப்போதுமே சினிமாவையே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்றார் கௌதம் கார்த்திக்.