'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாகி இருந்த சிவகார்த்திகேயனை தன்னுடன் '3' படத்தில் இணைந்து நடிக்க வைத்து அவருக்கு நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தார் தனுஷ். இதை தொடர்ந்து அதே தனியார் தொலைக்காட்சியில் 'பிராங்க் கால்' மூலம் பிரபலங்கள் பலரையும் கலாய்க்கும் தீனா என்பவரையும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் தனுஷ்.
இது மலையாளத்தில் கடந்த 2௦16ல் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. நூறு நாட்கள் ஓடிய இந்தப்படத்தை திலீப்பின் நண்பரான நாதிர்ஷா என்பவர் தான் இயக்கியிருந்தார். தமிழிலும் அவரே இயக்கவுள்ளார். தனுஷின் நட்புக்காக இதில் கதாநாயகனின் தந்தையாக நடிக்கிறாராம் நடிகர் விவேக்
அனேகமாக இந்தப்படத்திற்கு 'அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை' என டைட்டில் வைக்கப்படலாம் என்றும், இந்தப்படத்தின் ஒரிஜினலில் கதாநாயகனின் நண்பராக நடித்த காமெடி நடிகரான தர்மஜன் போல்காட்டி என்பவர் தமிழ் ரீமேக்கிலும் அதே கேரக்டரில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.