ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் 'ஆதி' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். 'த்ரிஷ்யம்', 'பாபநாசம்' படங்களை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் ஜன-26 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
ஒருபக்கம் பட ரிலீஸ் வேலைகளும், புரமோஷன் வேலைகளும் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் படத்தின் ஹீரோவோ இமயமலை பக்கம் ஒரு தேசாந்திரி போல சுற்றிக்கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்ல, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ள போவதில்லை என்பதையும் முன்கூட்டியே சொல்லிவிட்டுத்தான் இமயமலை கிளம்பினாராம் பிரணவ்..
ஆக பட ரிலீஸுக்கு முன்பு இமயமலை செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள ரஜினியையும், தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் விஷயத்தில் அஜித்தையும் தனது முதல் படத்திலேயே பின்பற்ற ஆரம்பித்துவிட்டார் பிரணவ் மோகன்லால்.