இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பாகமதி படத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. ஜனவரி 26-ந்தேதி இப்படம் வெளியாகும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிலேயே நவீன ஜிம் ரெடி பண்ணி, தற்போது கணிசமான அளவு வெயிட் குறைத்து விட்டார் அனுஷ்கா. அந்த போட்டோக்களை அவர் வெளியிட்டபோதுதான், தனது மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவு செய்தார் கெளதம்மேனன்.
ஏற்கனவே, அஜித்தை வைத்து தான் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்காவை நாயகியாக நடிக்க வைத்த கெளதம்மேனன், துருவ நட்சத்திரம் படத்தை அடுத்து தான் இயக்கும் மல்டி ஹீரோ படத்தில் அவரை வழக்கமான நாயகியாக இல்லாமல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம். அந்த வகையில் இந்த படத்தில் டூயட் பாடல்கள் எதுவும் இல்லாத புதுமாதிரியான அனுஷ்காவை பார்க்கலாம் என்கிறார்கள்.