டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தாண்டு தீபாவளிக்கு விஜய், அஜித், சூர்யா படங்கள் வெளியாக இருப்பதாக ஏற்கனவே நாம் கூறியிருந்தாம். அது இப்போது உறுதியாகி உள்ளது. விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமா அறிவித்துள்ளது அப்படத்தை தயாரிக்கும் - சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்.
செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும், புதிய படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என அதை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. இந்தநிலையில, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் 'ஹேப்பி தீபாவளி...' என டுவீட் செய்திருந்தார் முருகதாஸ்.
அஜித், விஜய், சூர்யா ஆகிய மூன்று ஹீரோக்கள் நடித்த படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானால் மிகப்பெரிய அதிசயம் தான். 2001ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' படமும், அஜித் நடித்த 'தீனா' படமும் ரிலீஸாகின.
2003-ல் விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த ஆஞ்சநேயா, சூர்யாவின் பிதாமகன் படங்கள் ரிலீஸ் ஆகின.
இன்றைய சூழலில் ஒரே நேரத்தில் மூன்று பெரிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை, காரணம் போதிய தியேட்டர் கிடைக்காது, வசூல் பாதிக்கப்படும். இதையெல்லாம் மீறி மூன்று படங்கள் வெளியானால் நிச்சயம் அதிசயம் தான்.