ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை பாவனா, தான் காதலித்த கன்னட தயாரிப்பாளர் நவீனை இன்று(ஜன., 22ம் தேதி) திருமணம் செய்து கொண்டார்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. ஏராளமான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் நவீனை காதலித்தார். இவர்கள் காதலுக்கும், திருமணத்துக்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், பாவனாவின் வாழ்க்கையில் சில அசாதாரண நிகழ்வுகள் நடந்தது. தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார் பாவனா.
பாவனா - நவீன் திருமண நிச்சயதார்த்தம், கடந்தாண்டு நடந்த நிலையில், கடந்த டிச., 22-ல் திருமணம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் ஜனவரி 22ம் தேதியான இன்று இவர்களது திருமணம் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாவனா - நவீன் திருமணம் இன்று சிறப்பாக நடந்தது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய திரையுலகினர் பலர் பங்கேற்கின்றனர். பாவனா - நவீன் திருமணத்தையொட்டி திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என ஏராளமானவர்களின் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.