தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சஞ்சிதா மனோகர் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ஆலி. குங்பூ வீரர் பத்தா, விளம்பர மாடல் அனு உபாத்யாயா ஹீரோ, ஹீரோயின்கள். இவர்கள் தவித பிரகோஷ்னி, லிவிங்ஸ்டன், சசிகலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஜய ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.என்.அருணகிரி இசை அமைக்கிறார். ராசி.மணிவாசகன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
ஆலி என்றால் பெருமழை என்று பொருள். ஒரு மழைக்காலத்தில் ஒரே இரவில் நடக்கும் கதை. கணவன் மனைவி மட்டுமே இருக்கும் ஒரு வீட்டுக்குள் ஒரு பேய் புகுந்து கொள்கிறது. வீட்டுக்கு வெளியே பெருமழை பெய்கிறது. அந்த மழையும், பேயும் சேர்ந்து கணவன் மனைவியை எப்படி டார்ச்சர் செய்கிறார்கள். அந்த பெண் பேய் யார், ஏன் இவர்களிடம் வரவேண்டும் என்பதுதான் திரைக்கதை. படத்தின் கிளைமாக்சில் எதிர்பாராத திருப்பம் இருக்கும். படத்தின் மழை ஒரு கேரக்டராக வருவதால், செயற்கை மழைக்கே படத்தின் பட்ஜெட் பெரும்பகுதி செலவாகியுள்ளது. என்றார் இயக்குனர் ராசி மணிவாசகன்.