ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
9 ஆண்டுகளுக்கு முன்பு பரத் நடித்த கண்டேன் காதலை படம்தான் பரத்தின் கடைசி வெற்றிப்படம். அதன்பிறகு அவர் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, வானம், அரவாண், ஐந்து ஐந்து ஐந்து, கில்லாடி, என்னோடு விளையாடு, கடுகு, உள்பட எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வில்லனாக நடித்த ஸ்பைடர் படமும் தோல்வி அடைந்தது. தற்போது சிம்பா, பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பரத்துக்கு இப்போதைக்கு தேவை ஒரு வெற்றி. அதனால் அவர் தேர்வு செய்திருக்கும் படம் காளிதாஸ். இதில் பரத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சிவநேசன் தயாரிப்பில் குறும்பட இயக்குனர் செந்தில் இயக்குகிறார். பரத் ஜோடியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் நடிக்கிறார். இவர்களுடன் ஆதவ் கண்ணதாசன் நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார். இது ஒரு துப்பறியும் த்ரில்லர் படம்.