'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் விஜய்யின் 62வது படம் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் இப்படத்தின் ஷுட்டிங் புகைப்படம் சினிமா ரசிகர்களிடம் வைரலாகப் பரவியது. படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் படம் ஆரம்பமானதை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஆனந்தமாய் இருக்கிறார்கள். இந்த வருட தீபாவளியை களைகட்ட வைக்க வேண்டும் என்று நேற்றே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால், அஜித் ரசிகர்களோ, 'விஸ்வாசம்' படம் பற்றி மேற்கொண்டு எந்தத் தகவலும் வெளியாகாததால் கவலையில் உள்ளார்கள். விஜய் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை என்பதும், அழகான கீர்த்தி சுரேஷ் கதாநாயகி என்பதும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் உள்ளது.
ஆனால், 'விஸ்வாசம்' படத்திற்கு ரகுமான் அளவிற்கு இல்லை என்றாலும் அனிருத் அளவிற்காவது இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்வார்கள் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே போல, முன்னணி நாயகி யாராவது ஒருவர் நடித்தால் அஜித்துக்குப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறார்கள். அது பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை 'விஸ்வாசம்' தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
'விஸ்வாசம்' படமும் விஜய் படத்துடன் தீபாவளிக்குப் போட்டி போட உள்ளதால், இப்போதே சமூக வலைத்தளங்களில் அதற்குப் போட்டியாக எதைப் பற்றி பரப்பிவிடுவது என அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். சீக்கிரமே, இசையமைப்பாளர், நாயகி, ஷுட்டிங் பற்றி விவரங்களை வெளியிட்டால், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்கு பொழுது போகும்.