'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த மணிமாறன், சித்தார்த் நடித்த 'உதயம் என்எச்4' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை.
அடுத்தப்பட வாய்ப்புக் கிடைக்காத நிலையில் ஹரீஷ் கல்யாண் நடித்த பொறியாளன் படத்தில் கதாசிரியராகப் பணிபுரிந்தார் மணிமாறன். அந்த படத்தைத் தொடர்ந்து ஜெய் கதாநாயகனாக நடித்த 'புகழ்' படத்தை இயக்கினார். ஜெய் கொடுத்த டார்ச்சரால் புகழ் படத்தை முடிப்பதற்குள் படாதபாடுபட்டார் மணிமாறன்.
இந்நிலையில் தற்போது புதிய படமொன்றை இயக்குகிறார் மணிமாறன். விசைத்தறித்தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பேசும் 'தறியுடன்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்குகிறார்.
சமுத்திரக்கனி, கருணாஸ், அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு 'சங்கத்தலைவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.