பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்த ரேநத்தில் திரையுலகினரின் பார்வையும் அவரது பக்கம் திரும்பி இருக்கிறது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமாக 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்ற படத்தை உருவாக்கத் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். அது நிறைவேறாமலே போனது.
எம்.ஜி.ஆரின் கனவு படமான 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' தற்போது அனிமேஷன் படமாக தயாராகி வருகிறது. இந்த அனிமேஷன் படத்தை அருள் மூர்த்தி இயக்குகிறார்.
இந்த படம் ஒரு பக்கம் உருவாகி வரும் அதே நேரத்தில், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. காமராஜ் என்ற படத்தை இயக்கிய ஏ.பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் பாத்திரத்தில் சதீஷ் குமார் என்பவர் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் பார்த்திரத்தில் 'மெட்ராஸ்', 'கபாலி' உட்பட பல படங்களில் நடித்துள்ள ரித்விகா நடிக்கிறார். அண்ணாதுரையாக இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி நடிக்கிறார்.
எம்.ஜி.ஆரின் பூர்வீக வீடு கேரளா, பாலக்கட்டில் உள்ளது. இந்த வீட்டிலும் சில காட்சிகளை படமாக்கியுள்ளார் இயக்குனர் பாலகிருஷ்ணன். ரித்விகா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிப்பு இம்மாதம் கடைசியில் துவங்கவிருக்கிறதாம்.