சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநயாகனாக அறிமுகமாகும் படம் 'ஆதி'. தன்னிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்த பிரணவை, மோகன்லாலின் ஆசியுடன் ஹீரோவாக மாற்றி படத்தை இயக்கியுள்ளார் த்ரிஷ்யம், பாபநாசம் புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப். வரும் ஜன-26ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்தப்படத்திற்காக பார்கோர் விளையாட்டு மற்றும் சில மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளை எடுத்துக்கொண்டார் பிரணவ். ஒருசமயம் படப்பிடிப்பில் கண்ணாடி கிளாஸை பிரணவ் உடைப்பது போல சண்டைகாட்சிகளை படமாக்கியபோது பிரணவுக்கு காயம் ஏற்பட்டதாம் “நான் மருத்துவமனைக்கு போகிறேன்” என கூலாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம் பிரணவ்.
ஆனால் மோகன்லாலுக்கு இந்த விஷயத்தை எப்படி தெரியப்படுத்துவது, அவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என கொஞ்சம் பயந்துதான் போனாராம் ஜீத்து ஜோசப்.. ஆனால் மோகன்லாலும் நடிகர்தானே.. அதனால் தனது மகன் காயம்பட்ட விஷயத்தையும் ஒரு நடிகரின் கோணத்திலிருந்து பார்த்ததால் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டாராம்.