சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ், ராஜீவ் நடித்த காக்கி சட்டை படம் 1985-ம் ஆண்டு வெளிவந்தது. சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்தார். ராஜசேகர் இயக்கினார், இளையராஜா இசை அமைத்திருந்தார், வி.ரங்கா ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல் நடித்த முதல் போலீஸ் படம். போலீஸ் வேலை கிடைக்காத இளைஞன் போலீஸ் வேலையை தானே செய்கிற கதை. இந்தப் படத்தில் தான் சத்யராஜ் தகடு... தகடு... என்ற பேசி நட்சத்திர வில்லன் ஆனார்.
வெள்ளி விழா கண்ட இந்தப் படம் 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியிடப்படுகிறது. பிலிமில் எடுக்கப்பட்ட படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி, ஒலியின் தரத்தை உயர்த்தி, சினிமாஸ்கோப் வடிவில் வெளியிடுகிறார்கள். சத்யா மூவீசுடன் இணைந்து டார்வின் பிக்சர்சார் இதனை வெளியிடுகிறார்கள்.