ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பத்ரிநாத் கி துல்கனியா படத்தில் ஹவுஸ்ஒயிபாக நடித்த நடிகை ஸ்வேதா பாசு பிரசாத், அடுத்தபடியாக த்ரில்லர் படம் ஒன்றில் போகிறாராம். இப்படத்திற்கு தஷ்கென்ட் பைல்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 2வது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் பற்றியது தான் இப்படத்தின் கதையாம். இத்தகவலை உறுதி செய்த ஸ்வேதா பாசு பிரசாத் கூறுகையில், இப்படத்தில் இதற்கு முன் நான் நடித்திறாத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் துருதுருப்பான பத்திரிக்கையாளராக நடித்துள்ளேன். லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் பற்றிய விசாரிக்கும் பத்திரிக்கையாளர் கேரக்டர். இந்த கேரக்டரால் தான் படத்தில் விறுவிறுப்பு ஏற்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன் என்றார்.
தஷ்கென்ட் பைல்ஸ் படத்தை விவேக் அக்னிஹேசத்ரி இயக்குகிறார். இப்படத்தில் நசீருதீன் ஷா, சிதுன் சக்ரபர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.