தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ஜெயப்பிரதாவிற்கு இங்கும் ஒரு காலத்தில் நிறையவே ரசிகர்கள் இருந்தார்கள். 40 வயதைக் கடந்தவர்களைக் கேட்டால் ஜெயப்பிரதாவின் அழகைப் பற்றி உண்மையிலேயே வர்ணித்துப் பேசுவார்கள்.
ஆண்கள் ஜெயப்பிரதாவின் அழகை வர்ணித்துப் பேசினால் பரவாயில்லை. ஆனால், பெண்கள், அதிலும் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயின்களாக இருந்தவர்களே அவரது அழகைப் பற்றிப் பேசி வியக்க வைத்தார்கள்.
ஜெயப்பிரதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கேணி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தில் அவருடன் நடிக்கும் ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக சுகாசினியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய 80களின் முன்னணி ஹீரோயின்களான இவர்கள் ஜெயப்பிரதாவின் அழகை அளவுக்கதிகமாகவே பாராட்டிப் பேசினார்கள்.
அழகான நடிகைகளே மற்றொரு சீனியர் நடிகையின் அழகைப் பாராட்டிப் பேசியது ஆச்சரியமாக இருந்தது. அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவருமே ஆர்வம் காட்டினார்கள்.