மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படுகிறவர் என்.டி.ராமராவ். ஆந்திர முதல்வராகவும் இருந்தார். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு தெலுங்கில் திரைப்படமாகி வருகிறது. என்.டி.ராமராவ் கேரக்டரில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். 100 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தப் படத்தை தேஜா இயக்குகிறார்.
ஒரு பக்கம் பாலகிருஷ்ணா நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. இன்னொரு பக்கம் மற்ற கேரக்டர்களில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் என்.டி.ராமராவின் பிறந்த நாளான நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ஆந்திர ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இணைய தளங்கில் லைக்குகளை குவித்து வருகிறார்கள். என்.டி.ஆருக்கு நெருக்கமான எம்.ஜி.ஆர், சிவாஜி கேரக்டரில் நடிப்பதற்கு சென்னையில் ஆடிசன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.