ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிக்கும் படக்கும் கீ. இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.
விழாவில் பேசிய தேனப்பன், சிம்புவுக்கு எதிராக ரெட் கார்டு போட வேண்டும் என்பது தொடர்பான மைக்கேல் ராயப்பன் விவகாரத்தில் விஷால் ஏன் சிம்பு மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு விஷால் ஆதரவு தயாரிப்பாளரான வின்னர் பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கீ பட விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் விழாவில் பேசிய விஷால், தேனப்பனின் கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், சிம்பு தரப்பில் இருந்து ரியாக்ஷனே இல்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசிக்கின்றோம். நல்லது நடக்க பொறுமை அவசியம்.
கீ படத்திற்காக இரும்புத்திரை வெளியீட்டை பிப் 9 இல் இருந்து தள்ளி வைக்கின்றேன். பார்க்கிங் கட்டணத்தை அரசு குறைத்துள்ளது. ஆனால் கமலா தியேட்டர் உட்பட பலர் நடைமுறை படுத்தவில்லை. அட்வான்ஸ் இல்லாமல் மைக்கேல் ராயப்பனுக்கு படம் நடிக்க உள்ளேன் என்றார்.