பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கெளதம்மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். அதன்பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு, ஜில்லா, வீரம், இனிமே இப்படித்தான், காக்கி சட்டை, பவர் பாண்டி என பல படங்களில் நடித்த அவர் பாகமதி படத்தில் அனுஷ்காவுடனும் நடித்துள்ளார்.
அதுபற்றி வித்யுலேகா ராமன் கூறுகையில், அனுஷ்காவை பல படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். ஒரு ஆர்ட்டிஸ்டாய் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. அது இப்போது பாகமதியில் நிறைவேறியிருக்கிறது.
மேலும், தமிழில் வேகமாக வளர்ந்து வந்த எனக்கு தற்போது சரியானபடி படங்கள் இல்லை. ஆனால் தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். அதோடு, தமிழ்ப்படங்களில் காமெடி நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரும் டைரக்டர்கள், காமெடியில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதனால்தான் தற்போது எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிற தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன் என்கிறார் வித்யுலேகா.