Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல: பிரகாஷ்ராஜ்

19 ஜன, 2018 - 10:48 IST
எழுத்தின் அளவு:
I-am-not-an-anti-hindu-says-prakash-raj

நடிகர் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் ஆங்கில டி.வி.சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பிரகாஷ்ராஜ் பேசியதாவது:

நான் அமைதியாகத்தான் இருந்தேன். நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருந்தேன். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை விழாவாக கொண்டாடினார்கள். அதை என்னால் தாங்க முடியவில்லை. அந்த கொலை பற்றி நாட்டின் பிரதமர் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கொலைகளை ஆதரிப்பவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்கிறார்கள். மற்ற மதத்தினரை புண்படும்படி பேசுகிறவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும். மோடியும், அமித்ஷாவும்தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள்.


பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பது தான். எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. 30 வருடங்களாக 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா. என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா? நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன், அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன். அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன். அதுவாவது இவர்களுக்கு தெரியுமா? என்றார் பிரகாஷ்ராஜ்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவிற்காக காத்துக்கொண்டிருந்த ரம்யாகிருஷ்ணன்அனுஷ்காவிற்காக ... அடுத்த லெவலுக்கு செல்லும் தமன்னா அடுத்த லெவலுக்கு செல்லும் தமன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
20 ஜன, 2018 - 00:43 Report Abuse
Murugan anaivarum sernthu indhu mathatthai oru vazhi pannavumena mudivu seithu vittaargal......
Rate this:
Kumaran Shanmugasundaram - alleppey,இந்தியா
19 ஜன, 2018 - 14:07 Report Abuse
Kumaran Shanmugasundaram கவுரி கொலை விவகாரத்தில் சிக்கியது காவி அல்ல தெரியுமா?ஒவ்வொரு கொலைக்கும் பிரதமர் பேச வேண்டும் என்றால் அதற்கு மட்டுமே சமயம் போறாது தெரியுமா?கொலைக்கும் பி.ஜே.பிக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இன்னுமா அறியவில்லை.?
Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
19 ஜன, 2018 - 12:19 Report Abuse
Nalam Virumbi இந்த சமூக சேவை மட்டும் செய்தால் போதும். அரசியலை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்
Rate this:
Milirvan - AKL,நியூ சிலாந்து
19 ஜன, 2018 - 12:17 Report Abuse
Milirvan பிரகாஷ் ராஜ் அவர்களே.. நீங்கள் கத்தோலிக்க கிறித்துவத்தை சார்ந்தவர் என்பதை, பெங்களூரு சாம்ராஜ்பேட் மார்க்கெட் பக்கத்திலுள்ள சர்ச்சுக்கு சென்றுகொண்டிருந்தனர் என்பதை இன்டர்நெட் காலங்களுக்கு முன்னால் வேண்டுமானால் மறைத்து ஹிந்து பெயரில் வலம் வந்திருக்க முடியும்.. இன்று அது எளிதல்ல.. எந்த கிறித்துவனாவது ஹிந்துக்களை மதம் மாற்ற, மனத்தளவிலாவது விரும்பாதிருக்கிறார்களா? அல்லது விக்கிரகாராதனையை இகழ்ந்து கேலி செய்யாமல் இருக்கிறார்களா? அப்புறம் என்ன 'நான் ஹிந்துக்களுக்கு எதிரானவன் இல்லை' பேச்சு? நீங்கள் ஒரு நல்ல நடிகர் என்பதோடு உங்கள் குணம் நின்றுவிடுகிறது.. ஹிந்துக்களுக்கு நீங்கள் எதிரானவரே..
Rate this:
Ramesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜன, 2018 - 12:08 Report Abuse
Ramesh உங்களை யாராவது இப்போ கேட்டார்களா. நீர் ஒரு நல்ல வில்லன் நடிகர் அதை தாண்டி தங்களுக்கு ஒரு முக்கியயத்துவமும் இல்லை. நடியுங்கள் காசு பாருங்கள். வேறு எதையும் தங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பதில்லை.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Maari 2
  • மாரி 2
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : சாய் பல்லவி ,வரலெட்சுமி
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Dev
  • தேவ்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ரகுல் ப்ரீத்தி சிங்
  • இயக்குனர் :ரஜத் ரவிஷங்கர்
  Tamil New Film Adangamaru
  • அடங்கமறு
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :கார்த்திக் தங்கவேல்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in