ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செலக்டிவான கேரக்டர்களை, படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதால் நடிகை மம்தா மோகன்தாஸ் குறைவான படங்களில் நடிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதென்னவோ உண்மை தான். ஆனால் அதுதான் அவரை இன்னும் திரையுலகில் கதாநாயகியாகவே நீடித்து வலம்வர செய்கிறது என்பதையும் மறுக்க முடியாது.
அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள 'கார்பன்' என்கிற படத்தில் பஹத் பாசில் ஜோடியாக முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் மம்தா மோகன்தாஸ். காட்டுக்குள்ளேயே படமாக்கப்பட்டதும், அடிக்கடி அதிக லோக்கேசன்கள் மாறியதும் என, தான் இதுவரை நடித்த படங்களிலேயே தன்னை அதிகம் சவால் நிறைந்தது என்றால் அது 'கார்பன்' தான் என்கிறார் மம்தா மோகன்தாஸ்.
அந்த அளவுக்கு படத்தில் சவாலான ரோலில் நடித்துள்ளாராம் மம்தா. நான்கு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'முன்னறியிப்பு' என்கிற க்ரைம் த்ரில்லரை இயக்கிய இயக்குனர் வேணு தான் இந்தப்படத்தையும் இயக்கியுள்ளார்.