Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு 'குயின்' ரீமேக் இயக்குனர் விலகல், தமன்னா காரணமா ?

17 ஜன, 2018 - 18:25 IST
எழுத்தின் அளவு:
Telugu-Queen-Remake-:-Director-out-from-film-due-to-Tamanna

விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் கங்கனா ரனவத் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'குயின்'. இப்படத்தின் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய படங்களின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி நடந்து வருகின்றன. பிரான்ஸ் நாட்டிலும் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களை தெலுங்கு இயக்குனர் நீலகண்டா, தமிழ், கன்னட மொழிப் படங்களை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்கள். தெலுங்கில் தமன்னா கதாநாயகியாகவும், கன்னடத்தில் பருல் யாதவ், தமிழில் காஜல் அகர்வால், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இதனிடையே, தெலுங்கு, மலையாளப் படங்களை இயக்கி வந்த நீலகண்டா, தெலுங்கு மொழிப் படத்தை இயக்குவதை விட்டு விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமன்னா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்தை தொடர்ந்து இயக்க முடியாது என தெரிவித்தார் என்கிறார்கள்.

இந்த விவகாரம் டோலிவுட்டில் புகைச்சலைக் கிளப்பியது. ஆனால், தமன்னா, அவருக்கும், இயக்குனருக்கும் எந்தப் பிரச்சனையில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்காதவரை பல வித செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in