'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எம்.ஜி.ஆர்., தயாரித்து, நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். 1973-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கபோடு போட்ட படம். இந்தப் படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று எம்.ஜி.ஆர் டைட்டில் கார்டு போட்டார். அதாவது உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் படமாக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை எம்.ஜி.ஆர் உருவத்தைக் கொண்டு அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேசன் தயாரிக்கிறார். அருள்மூர்த்தி என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் துவக்க விழா சென்னை, அடையாறில் உள்ள எம்ஜிஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் நடந்தது. நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தனர். எம்ஜிஆர்., பிறந்தநாளில் இப்படம் துவங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
இந்த விழாவில் எம்ஜிஆர்., உடன் பணியாற்றிய நடிகைகள் லதா, சவுகார் ஜானகி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
ரஜினி, கமல் இருவரும் அரசியல் வருகையை அறிவித்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றது இப்பட விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.