'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், உள்ளிட்ட காதல் சென்டிமெண்ட் படங்களை இயக்கியவர் எழில். சில காலம் வாய்ப்பில்லாமல் இருந்தவர், திடீரென காமெடி படங்களின் பக்கம் திரும்பினார். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வெள்ளக்காரதுரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களை இயக்கினார். இந்த படங்கள் மினிமம் கியாரண்டி படங்களாக அமைந்தது. அதனால் இந்த பார்முலாவை கச்சிதமாக பிடித்துக் கொண்டார்.
ஏற்கெனவே விஷ்ணுவுடன் இணைந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தை தந்த எழில், இப்போது மீண்டும் எழிலுடன் இணையும் படத்திற்கு ஜகஜால கில்லாடி என்று டைட்டில் வைத்திருக்கிறார். இதில் விஷ்ணு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா உள்ளிட்ட பலர் இதில் நடிக்கிறார்கள். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.