ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: நடிகர் கமல், பிப்., 21ல், அரசியல் கட்சி பெயர் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.
பிரபல நடிகர் கமல், டுவிட்டர் சமூக வலைதளத்தில், தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக, தமிழகத்தில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், கமல், தன் அரசியல் பிரவேசம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிப்., 21ல், ராமநாதபுரத்தில் சுற்றுப் பயணத்தை துவங்க உள்ள கமல், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று, மக்களை நேரில் சந்திக்க உள்ளார். அன்றைய தினமே, கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என, அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள அவர், நேரடி அரசியலில் தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளதாக, அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.