பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2017-ம் ஆண்டு ஆகஸ்டில் தெலுங்கில் வெளியான படம் அர்ஜூன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா - ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்து நடித்த இந்த படம் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பாலா இயக்கும் அந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார்.
அர்ஜூன் ரெட்டி படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த நாயகன் வேடத்தில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பார் என்று முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர் நாயகனாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது.