ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரைக்கு வரும் படங்கள் தியேட்டர்களில் ரசிகர்களின் ஆதரவில் ஓடுகிறதோ இல்லையோ அந்தப் படங்களை படம் வெளியான மறுநாளில் இருந்தே பிரம்மாண்ட வெற்றி, சாதனை வெற்றி, அசத்தல் வெற்றி, மகத்தான வெற்றி, பாக்ஸ் ஆபீஸ் வெற்றி என விளம்பரப்படுத்த ஆரம்பிப்பார்கள். கடந்த வருடங்களோடு அதெல்லாம் கடந்து விடும் என்று எதிர்பார்த்தால் இந்த 2018ம் ஆண்டிலும் 'சக்சஸ் மீட்' சந்திப்பு நடைபெறப் போகிறது.
பொங்கலுக்கு வெளிவந்த மூன்று படங்களில் இரண்டு படங்களுக்கு சக்சஸ் மீட் நடத்த உள்ளார்கள். இன்று 'ஸ்கெட்ச்' படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. நாளை 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் சக்சஸ் மீட் நாளை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'கேங்' படத்தின் சக்சஸ் மீட் ஏற்கெனவே ஐதராபாத்தில் நடந்துவிட்டது.
2018ம் ஆண்டிலும் இன்னும் இது போல பல சக்சஸ் மீட்டுகள் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.