பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் '2.O'... அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஜன-26க்கே ரிலீஸாக வேண்டிய படம், கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் வரும் ஏப்-27ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஆகஸ்ட் சினிமா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. சுமார் ரூ.16 கோடிக்கு 2.O படம் விற்பனையாகி உள்ளதாம். இது பாகுபலி 2 படத்தை விட அதிகம் என்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். 2.O படம் கேரளாவில் அதிகப்படியாக மம்முட்டி, மோகன்லால் படங்கள் ரிலீஸாகும் அளவுக்கு கணிசமான தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்த நிறுவனத்தின் இன்னொரு பங்குததாரராக இருந்த நடிகர் பிருத்விராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.