பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ஒரு கதை சொல்லட்டுமா. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்திற்கு மற்ற மொழிகளில் 'தி சவுன்ட் ஸ்டோரி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். கடந்த நவம்பரில் தமிழில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் ஷங்கர் முன்னிலையில் நடத்தினார் ரசூல் பூக்குட்டி.
இதை தொடர்ந்து நேற்று மாலை இந்தப்படத்தின் மலையாள இசை வெளியீட்டு விழாவை கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடத்திய ரசூல் பூக்குட்டி, விழாவில் நடிகர் மம்முட்டியை வைத்து இசையை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்வில் பாலிவுட் இயக்குனரான மதூர் பண்டார்கரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்..