Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

25 படங்களை அழுத்தமாகத் தொட்ட விஜய் சேதுபதி

16 ஜன, 2018 - 10:29 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-in-25th-film

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பக்கம் வாரிசுகளின் கடுமையான போட்டிகள் இருந்து வரும் நிலையில் தங்களது சொந்தத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நாயகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி.

கூட்டத்தில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானவர் பின்னர் ஓரிரு வசனங்கள் பேசும் வாய்ப்பையும் பெற்றார். அப்படியே நண்பர்களில் ஒருவராக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

2010ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நடித்து வெளிவந்த தென்மேற்குப் பருவக்காற்று படம் தேசிய விருதுகளைப் பெற்று அந்தப் படம் மீதான பார்வையை திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் அழுத்தமாகப் பதிய வைத்தது.

2012ம் ஆண்டு வெளிவந்த பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஆகிய படங்களின் தொடர் வெற்றி, விஜய் சேதுபதியின் விதவிதமான கதாபாத்திரங்கள் அவரை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றது. அவரது நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு நடிகராக உயர்ந்தார் விஜய் சேதுபதி.

அடுத்து சில தோல்விப் படங்கள் வந்தாலும், 2015ம் ஆண்டு வெளிவந்த நானும் ரௌடிதான் படத்தின் மூலம் மீண்டும் எழுந்து நின்றார். அந்த எழுச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் படத்திற்குப் பிறகு, “சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க, கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன்” என ஒரு படத்தைத் தவிர மற்ற படங்கள் அவருக்கு வெற்றியையும், பெயரையும் வாங்கிக் கொடுத்தன.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் அடுத்த மாதம் வெளியாகிறது. 96, சூப்பர் டீலக்ஸ், ஜுங்கா, சை ரா நரசிம்ம ரெட்டி, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. மணிரத்னம் இயக்க உள்ள படத்திலும் நாயகனாக நடிக்க உள்ளார்.

இன்று விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய 25வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் படத்தின் முதல் பார்வை பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

கதாநாயகனாக எட்டு வருடங்களில் 25வது படத்தைத் தொட்டுள்ள விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் திறமையாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் என்ற பெயரை குறுகிய காலத்திலேயே எடுத்தவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in