டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடக ஆசிரியர் உள்பட பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரரான ஞாநி சங்கரன் உடல்நலக் குறைவால் காலமானார். ஞாநியின் மரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், நாசர், பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் கமல்ஹாசன் தன் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது. அவர் தானத்திற்கு சடங்குகள் தடையாகாமல் அனுமதித்த குடும்பத்தாரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.