டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். எம்.ஜி.ஆருடன் லதா, சந்திரலேகா, மஞ்சுளா, நாகேஷ், நம்பியார், அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். 1973-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சக்கபோடு போட்ட படம். இந்தப் படத்தின் இறுதியில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று எம்.ஜி.ஆர் டைட்டில் கார்டு போட்டார். அதாவது உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் படமாக்க நினைத்திருந்தார் எம்.ஜி.ஆர். படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அது நடக்கவில்லை.
இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை எம்.ஜி.ஆர் உருவத்தைக் கொண்டு அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேசன் தயாரிக்கிறார். இதற்கான தொடக்க விழா நாளை மறுநாள் (17ந்தேதி) அடையாறு சத்யா ஸ்டூடியேரிவல் நடக்கிறது. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.