'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிங்கம் டைட்டிலில் மூன்று பாகங்களிலும் துரைசிங்கமாக நடித்தவர் சூர்யா. அவரது தம்பியும், நடிகருமான கார்த்தி, நடிக்கும் புதிய படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, பாண்டிராஜ் இயக்குகிறார்.
கடைக்குட்டி சிங்கத்திற்கு விமல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை அமைக்கிறார், வீரசமர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இது விவசாயம் தொடர்பான படம். அதனால் தான் பயிர் செய்ய விரும்பு என்ற படத்திற்கு துணை தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
கார்த்தி இளம் விவசாயியாக நடிக்கிறார். விவசாயத்தை உயிராக நேசிக்கும் கார்த்திக்கும், அவரின் விவசாய நிலத்தை பறித்து அதை தொழில்கூடமாக மாற்ற நினைக்கும் கார்பரேட் கம்பெனிக்குமான மோதல் தான் கதை என்கிறார்கள்.
தஞ்சாவூர், காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இரண்டே ஷெட்யூல்களில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.