தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
எம்சிஏ படத்தை அடுத்து நானி நடித்து வரும் புதிய படம் கிருஷ்ணார்ஜூனா யுத்தம். அனு இம்மானுவேல், ருக்சர் மிர் ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா, அர்ஜூன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நானி. மெர்லபக காந்தி இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு சந்தீப் கிஷன் நடித்த வெங்கடட்ரி எக்ஸ்பிரஸ், சர்வானந்த் நடித்த எக்ஸ்பிரஸ் ராஜா ஆகிய படங்களை இயக்கியவர்.
மேலும், இந்த கிருஷ்ணார்ஜூனா யுத்தம் படத்தின் முதல் பாடல் வீடியோ மற்றும் பாடல் சங்கராந்திக்கு வெளியாகயிருப்பதாக நடிகர் நானி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 12-ந்தேதி வெளியாகிறது. இதற்கு முன்பு ராம்சரண் நடித்த துருவா படத்திற்கு இசையமைத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு இந்த கிருஷ்ணார்ஜூனா யுத்தம் இரண்டாவது தெலுங்கு படமாகும்.