Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெர்சல் - மொத்த வசூல் 300 கோடி ?

14 ஜன, 2018 - 11:32 IST
எழுத்தின் அளவு:
did-mersal-totally-collects-rs.300-cr

அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மற்றும் பலர் நடித்த மெர்சல் படம் 2017ம் வருடம் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. படம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி அதிகப்படியான வசூலை அள்ளி ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 125 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம், தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் சுமார் 125 கோடி வரை வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், இந்தியாவின் பிற மாநிலங்களில் சுமார் 3 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் சுமார் 82 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதில் அதிக பட்சமாக மலேசியாவில் 19 கோடியும், அமெரிக்காவில் 12 கோடியும் வசூலித்திருக்கிறது. படத்தை வாங்கிய அனைவருக்குமே மெர்சல் படம் பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


படம் வெளியாகி 85 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில் மெர்சல் படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த டிவி ஒளிபரப்பு உரிமை மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் என மொத்தமாக மெர்சல் படம் மூலம் நடந்த வியாபாரம் 300 கோடியைத் தாண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆனால், தமிழ் சினிமாவில் எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களது வியாபார வரவைப் பற்றி வெளியில் சொல்வதில்லை.


Advertisement
உங்களுக்கு இதயம் இருந்தால்...விக்னேஷ் சிவன் கோபம்உங்களுக்கு இதயம் ... சேரிப்பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயா சேரிப்பெண்ணாக நடிக்கும் ஸ்ரேயா


வாசகர் கருத்து (12)

pattikkaattaan - Muscat,ஓமன்
15 ஜன, 2018 - 09:33 Report Abuse
pattikkaattaan vantha lapaththil 20% commision Thamilisaikkum, H. Raja virkkum kodukkavum... avarkalaalthaan padam odiyathu...
Rate this:
Mannan - Madurai,இந்தியா
15 ஜன, 2018 - 09:20 Report Abuse
Mannan கோடிக்கணக்குல வருமானவரி கட்டாம சினிமால வாயால வட சுட்டு, கோடி கோடியா சம்பாதிக்கலாம். இருபது ரூவா குடுத்து தேர்தல்ல ஜெயிக்கலாம். எவனாவது ரொம்ப பேசுனா நான் தமிழன்னு சொல்லி எல்லாரையும் கேனயனாகிடலாம். இதெல்லாம் இன்னமும் ஜீரணிக்க முடியல்லேன்னா நீ தமிழ் துரோகின்னு அர்த்தம்.
Rate this:
Muthukumar - Faheel,குவைத்
15 ஜன, 2018 - 08:49 Report Abuse
Muthukumar பிஜேபிக்கு நான்றி
Rate this:
15 ஜன, 2018 - 07:23 Report Abuse
சாமி நல்ல சொம்பு தூக்குற தூக்கு தூக்கு நல்ல தூக்கு அப்படியே சுறா 300 கோடி புலி 500 கோடி சொல்லு
Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
15 ஜன, 2018 - 06:49 Report Abuse
Makkal Enn pakam இதுல கொஞ்சம் பணத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்ட கொடுத்தால், நடிகர், நடிகைகள் ஊர் ஊராக தட்டு ஏந்த வேண்டிய அவசியம் இருக்காது.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Sandakozhi 2
  • சண்டகோழி 2
  • நடிகர் : விஷால்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
  • இயக்குனர் :லிங்குசாமி
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film VadaChennai
  • வடசென்னை
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in