ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லால் மலையாளத்தில் தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்திற்காக தனது உடல் எடையில் 15 கிலோ குறைத்து, கடந்த சில நாட்களாக ஸ்லிம் லுக்கில் இளைஞன் போல வலம் வருகிறார். அவரது இந்த தோற்றம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. குறிப்பாக நடிகை அனுஷ்காவை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது.
இதுபற்றி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிய அனுஷ்கா, “இந்தியில் ஆமீர்கான், தெலுங்கில் பிரபாஸ், தமிழில் விக்ரம், மலையாளத்தில் மோகன்லால் இவர்கள் தான் தங்களது எடையை கூட்டி குறைப்பதில் என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.. மற்றவர்களை விட சீனியர் நடிகரான மோகன்லால் ஒரு படத்துக்காக இவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் இப்படி எடையை குறைத்திருப்பது தான் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது” என கூறியுள்ளார்.
அவர் மோகன்லாலை வியந்து பாராட்டுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தான் நடித்த 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையை கூட்டி, அதன்பின்னர் குறைக்கமுடியாமல் சிரமப்பட்டவர் தானே அனுஷ்கா..?