Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்மிடம் எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்திருந்தால் பிழைத்துகொள்ளலாம் - இயக்குநர் லிங்குசாமி

14 ஜன, 2018 - 11:01 IST
எழுத்தின் அளவு:
If-you-to-wrote-kavidhai,-you-will-survive-says-director-lingusamy

இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியிட்டு விழா நேற்று (ஜன.,13) மாலை சென்னை ரஹ்யன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தம், இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல் , வசந்தபாலன் , கவிஞர் பிருந்தா சாரதி, நடன இயக்குநர் ராஜு சுந்தரம், எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

"லிங்கூ - ஹைக்கூ " நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லிங்கு​​சாமி கூறியது : தாகூரின் கவிதை ஒன்று நியாபகம் வருகின்றது. சரியானவற்றை நீ தேர்ந்தெடுப்பதில்லை. சரியானவை உன்னை தேர்ந்தேடுக்கின்றன. அவ்வாறு அமைந்தது தான் என்னுடைய அனைத்து நண்பர்களும் இந்த மேடையும். இங்கு மேடையில் உள்ள அனைத்து நபர்களுடனும் 25 வருடம் அல்லது 25 மாதங்களாக இருக்கலாம். ஆனால் இவர்களிடம் நீண்ட ஒரு பிடிப்பு உள்ளது.பாலாஜி சார் தான் முதல்முறையாக என்னுடைய கவிதையை படித்து காட்டி என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். பாலாஜி சாரை அறிமுகப்படுத்திய பாலன். இதே புஷ்கின் இலக்கிய பேரவைக்காக ஒரு மூன்று வரி கவிதையை எழுத வேண்டும் என்று முதல் முதலாக சந்தித்த பிருந்தா சாரதி அவர்கள் இப்பொது அதே ஹாலில் என்னுடைய கவிதை புத்தகத்தை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு மூன்று வரி கவிதை விகடனில் எழுதி 30 ரூபாய் பணம் வந்த பிறகு எப்படியும் எழுதி பிழைத்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான் நான் சென்னைக்கு வந்தேன். இப்பொதும் இதற்கு முன்பு கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது போன்று நம்மிடம் இருந்து எல்லாம் போன பின்பும் கவிதை எழுத தெரிந்தால் பிழைத்துக்கொள்ளலாம். இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் இயக்குநர் லிங்குசாமி.


விஷால் பேசியது :- எனக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை ஏன் லிங்குசாமி இங்கே அழைத்தார் என்று தெரியவில்லை. எனக்கு அவரை இயக்குநர் லிங்குசாமியாக தான் தெரியும். எனக்கு கவிதை , புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இன்று முதல் இயக்குநர் லிங்குசாமி “ லிங்கு ஹைக்கு “ புத்தகம் கண்டிப்பாக என்னுடைய அறையில் இருக்க போகிறது. இது தான் நான் வாசிக்க போகும் முதல் கவிதை புத்தகம் என்றார்.


இந்நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரே சொந்தமாக ஒரு கவிதையை எழுதி வந்து வாசித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றார். “ கரப்பான் பூச்சியை “ மையமாக கொண்ட கவிதை ஒன்றை கூறி இது தான் தனக்கு பிடித்த கவிதை என்று கூறினார்.


தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தமிழ் பேசாத இக்காலத்தில். கீர்த்தி சுரேஷ் தமிழில் கவிதை ஒன்றை கூறியது. தனக்கு பிடித்த தமிழ் கவிதை பற்றி பேசியது தங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக பேசிய எழுத்தாளர்கள் அனைவரும் கூறினார்கள்.


Advertisement
டுவிட்டரில் ரஜினி பொங்கல் வாழ்த்துடுவிட்டரில் ரஜினி பொங்கல் வாழ்த்து உங்களுக்கு இதயம் இருந்தால்...விக்னேஷ் சிவன் கோபம் உங்களுக்கு இதயம் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in