திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகை கரீனா கபூர் கான், சோனம் கபூர், ஸ்வர பாஸ்கர், ஷிக்லா தல்சானியா ஆகியோர் நடித்துள்ள படம் வீரி தி வெட்டிங். ஷாஷன்கா கோஸ் இயக்கி உள்ள இப்படத்தை ரியா கபூர் மற்றும் ஏக்தா கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பெண்ணை மையமாகக் கொண்ட இப்படம் முழு நீள காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இந்த ஆண்டு மே 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் மாதம் முதல் தேதிக்கு மாற்றி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முன்பு அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக ஜூன் மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.