மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை கத்ரினா கைப்பின் சகோதரியான இஸ்பெல்லா கைப், ரீமேக் செய்யப்படும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் சூரஜ் பன்சோலிக்கு ஜோடியாக இஸ்பெல்லா நடிக்கிறாராம்.
இஸ்பெல்லா அறிமுகமாகும் படத்தை நடிகர் சல்மான் கான் துவக்கி வைக்க உள்ளதாகவும், பெயரிடப்படாத அப்படத்தை டி சீரிஸ் தலைவர் பூஷண் குமார் தயாரிக்க உள்ளதாகவும் முன்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சூரஜ் நடிக்கும் படத்தில் இஸ்பெல்லா நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கப்பட உள்ளதாம்.
2014 ம் ஆண்டு வெளியான டாக்டர் காபீ என்ற இந்தோ - கனடிய படத்தின் ரீமேக்கில் தான் இஸ்பெல்லா நடிக்க போகிறாராம். இது காமெடி கலந்து ரொமான்டிக் படமாம்.