இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இவன் தந்திரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் கண்ணன், அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்திருப்பவர்.
படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் உபன் படேல் நடிக்கிறார். இவர், ஏற்கனவே விக்ரமின் ஐ படத்தில் வில்லனாக நடித்தவர். இவர்களுடன் ஆர்ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கண்ணனே தயாரிக்கவும் உள்ளார். அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன் இசையமைக்கிறார். வரும் ஜன.,19-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.