'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த படம் குயின். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் ரீமேக்காகி வருகிறது. தமிழ்ப்பதிப்பில் காஜல் அகர்வால் நடிக்க, தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள். தெலுங்கு, மலையாளம் பதிப்புகளை நீலகண்டா இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது. அப்போது நடந்த படப்பிடிப்பில் காஜல், தமன்னா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கலந்து கொண்டார். படப்பிடிப்பு ஆரம்பமானதில் இருந்தே இயக்குநருக்கும், தமன்னாவுக்கும் இடையே மோதல் உருவானதாக கூறப்படுகிறது.
காரணம், குயின் ஹிந்தி படத்தின் கதையில் இருந்து தெலுங்கு பதிப்புக்கு இயக்குனர் சில திருத்தங்களை செய்திருக்கிறாராம். ஆனால் அது தமன்னாவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து வருகிறாராம் தமன்னா. அதன்காரணமாக மஞ்சிமா மோகன் நடிக்கும் மலையாள பதிப்பின் படப்பிடிப்பை மட்டும் தற்போது நடத்தி வருகிறாராம் டைரக்டர் நீலகண்டா.