பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார், பி.எஸ்.விநோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
இந்தப் படத்தில் முதலில் நதியா ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக இருந்து, அவர் ஒப்பந்தமும் செய்யப்பட்டிருந்தார். வில்லி கேரக்டர் தான் என்று கூறப்பட்டதாம். ஆரண்ய காண்டம் படம் பிடித்திருந்ததால் கதை கேட்காமல் நம்பி ஒப்புக் கொண்டாராம் நதியா. ஆனால் நடிக்க வந்த பிறகுதான் அது கொடூர வில்லி கேரக்டர் என்பது தெரிய வந்ததாம். இதில் நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதியவர் படத்திலிருந்து விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். "படத்திலிருந்து விலகியது உண்மைதான் ஆனால் அதற்கான காரணத்தை சொல்ல முடியாது" என்று கூறியிருக்கிறார் நதியா.